தமிழ்
Surah Al-Ghashiya ( The Overwhelming ) - Aya count 26
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
( 1 ) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
( 2 ) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ
( 3 ) அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
( 4 ) கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
( 5 ) கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
( 6 ) அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ
( 7 ) அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
( 8 ) அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
( 9 ) தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
فِي جَنَّةٍ عَالِيَةٍ
( 10 ) உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
( 11 ) அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
( 12 ) அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
( 13 ) அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
( 14 ) (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
( 15 ) மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
( 16 ) விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
( 17 ) (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
( 18 ) மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
( 19 ) இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
( 20 ) இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ
( 21 ) ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
( 22 ) அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
( 23 ) ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ
( 24 ) அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ
( 25 ) நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
( 26 ) பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.